internet

img

வாட்ஸப் அப்டேட்டில் புதிய அம்சங்கள்!

வாட்ஸப் அப்டேட்டில், ஆத்தன்டிகேஷன் மற்றும் செக்பாயிண்ட் டிப் லைன் போன்ற புதிய அம்சங்களை கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

வாட்ஸப் செயலி சமூகவலைத்தளங்களில் மிக முக்கிய பங்காற்றி வருகிறது. உண்மை செய்திகள் எவ்வாறு மக்களிடம் சென்றடைகிறதோ, அதை விட வதந்திகள் மிக வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுவதற்காக வாட்ஸ்அப் நிறுவனம் புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதே நேரத்தில் மக்களின் கருத்து சுதந்திரத்தையும் வாட்ஸ்அப் பாதுகாத்து வருகிறது. 

இந்நிலையில், தற்போது வாட்ஸபில் ஒருவருக்கு நாம் அனுப்பும் தனிப்பட்ட மெசேஜ்களை ஸ்கிரீன் ஷாட் எடுப்பதை தடுக்கும் வகையில், ஆத்தன்டிகேஷன் (Authentication) என்ற புதிய அப்டேட் கொண்டு வர முயற்சித்து வருகிறது. இந்த அப்டேட் அமலுக்கு வந்ததும், இனி வாட்ஸ்அப் செயலியில் ஸ்கிரீன் ஷாட் செயல்படாது. அதே நேரத்தில், போன் லாக்கில் இருந்தாலும், வாட்ஸ்அப் நோட்டிஃபிக்கேஷன் பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதே போல், வாட்ஸபில் வலம் வரக்கூடிய செய்திகள் உண்மையா அல்லது வதந்தியா என்பதை கண்டுபிடிக்கும் வகையில், செக்பாயிண்ட் டிப் லைன் (Checkpoint Tip Line) என்று ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது. வாட்ஸபில் ஏதேனும் பதைபதைக்க வைக்கும் தகவல் வந்தாலோ, அல்லது வேறு ஏதேனும் செய்திகள் வந்தாலோ, பயனர்கள் அதை அப்படியே செக்பாயிண்ட் நம்பரான +91-9643000888 என்ற எண்ணிற்கு சமர்ப்பிக்கலாம். இதையடுத்து அந்த தகவல் உண்மை தன்மையை செக்பாயிண்ட் டிப் லைன் ஆய்வு மையம் உறுதி செய்து பயனர்களுக்கு அனுப்பிவிடும்.

இந்த அம்சம், தற்போது ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இயக்கப்படுகிறது. விரைவில் பெரும்பாலான மொழிகளிலும் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 



;